அந்த பாடலை கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் – இமான்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்து. அவரை கூட்டி வந்து சீறு, அண்ணாத்தே படத்தில் பட வைத்தார் இமான். வைக்கம் விஜயலட்சுமியை என்னமோ எதோ படத்தில் புதிய உலகை ஆள போகிறேன் என்ற பாடல் மூலம் தமிழில் முதலில் பட வைத்தார். வேடந்தாங்கல் கிராமத்தில் புத்தர் கலை குழுவில் பறை இசைத்து கிராமிய பாடல்கள் பாடி கொண்டு இருந்த நாட்டுபுற பாடகரான மகிழினி தமிழ்மாறனை கும்கி படத்தின் கையளவு நெஞ்சத்துல பாடல் முலம் திரைக்கு அறிமுகப்படுத்தினர். வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஹரி ஹர சுதன் அறிமுகபடுத்தினார். நாட்டுபுற பாடகரான செந்தில் கணேஷ் சீமாராஜா படத்தில் பயன்படுத்தி இருப்பார். இப்படி திறமையானவர்களை அடையாள படுத்தும் இமானின் பட்டியலில் தற்போது புதிதாக சேர்த்து இருப்பவர் ஸ்வஸ்திகா சுவாமிநாதன் இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வளர்ந்து வரும் பாடகரான ஸ்வஸ்திகா சுவாமிநாதனின் ஆத்மார்த்தமான குரலில் யுக பாரதி வரிகளில் உருவாகி உள்ள அணையா விளக்கு பாடலை தான் இசையில் விரைவில் வெளியாக இருக்கும் பப்ளிக் திரைப்படத்தில் கேட்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.ஏற்கனவே பப்ளிக் படத்தின் போஸ்டர்கள் sneak peakகள் இணையத்தில் வைரல் ஆகின. தற்போது இந்த படத்தின் இசை குறித்தும் அதில் இடம் பெற்று உள்ள பாடல் மற்றும் சிங்கர் குறித்தும் இமான் ட்விட் செய்து இருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.