‘போக்கிரி ராஜா’ திடீர் உதவி! : நெகிழ்ந்து போன துப்புரவு தொழிலாளர்கள்

Get real time updates directly on you device, subscribe now.

Pokkiri-Raja1

ரு தோல்விக்குப் பிறகு தேவைப்படும் வெற்றி அடுத்த படத்தில் கிடைக்கும் என்றால் உடனே அந்தக் கதையை ‘டிக்’ செய்வது தானே புத்திசாலித்தனம்.

அப்படி ஜீவா கமிட் செய்த படம் தான் ‘போக்கிரி ராஜா’.

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ வெற்றிப் படத்தைக் கொடுத்த ராம்பிரகாஷ் ராயப்பா தான் கதை சொல்லி ஜீவாவை இம்ப்ரஸ் பண்ணியவர்.

”நான் ஒரு ஹிட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது டைரக்டர் ராம்பிரகாஷ் இந்தக் கதையை என்கிட்ட சொன்னார். கேட்ட உடனே விழுந்து விழுந்து சிரிச்சேன். அப்படி ஒரு பக்காவான காமெடிப்படம். நானும் அப்படி ஒரு படம் பண்ணி ரொம்ப நாளாச்சுங்கிறதுனால மத்த படங்கள் இருந்தாலும் இந்தப் படத்தை டக்குன்னு ஆரம்பிச்சு 60 நாட்களை வேகமா முடிச்சிட்டோம்” என்றார் ஜீவா.

Related Posts
1 of 10

‘புலி’ படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தனது பிடிஎஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக வழங்க டி.எஸ். பொன்செல்வி தயாரித்திருக்கிறார்.

ஜீவாவுடன், சிபிராஜ், ஹன்சிகா, அறிமுக நடிகை மானஸா, முனீஸ் காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகி பாபு, சுஜாதா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஆஞ்சநேயலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு முடியும் நாள் என்பதால் அந்த நிகழ்வை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து நிறைவு செய்யலாமே? என்று தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமாருக்கு ஐடியா வர, ஹீரோ ஜீவா உட்பட போக்கிரி ராஜா யூனிட்டே ஓ.கே சொல்ல ஜீவா, சிபிராஜ், ஹன்ஷிகா ஆகியோர் முன்னிலையில் அந்த பெருமை மிகு நிகழ்வு நடந்தது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தன்னார்வலர்களும் உதவிகள் செய்தாலும், அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போதும் கூட துப்புரவுப் பணிகளை செய்து கொண்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரிசி, போர்வை, துண்டு உள்ளிட்ட பொருட்களை உதவியாக வழங்கினார்கள். ‘போக்கிரி ராஜா’வின் இந்த திடீர் உதவியை கொஞ்சமும் எதிர்பாராத துப்புரவுத் தொழிலாளர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

”இது ஒரு ஷூட்டிங் ஸ்பாட் மாதிரியே தெரியல. ஒரு காலேஜுக்கு எப்படி போயிட்டு வர்றோமோ? அப்படி ஒரு மனநிலையில தான் வேலை செஞ்சோம். திட்டமிட்டபடி ஷூட்டிங் முடியணும்னா அதுக்கு டீம் ஒர்க் ரொம்ப முக்கியம். எங்க போக்கிரி ராஜா டீமும் டீம் ஒர்க் தான். எல்லோருமே உண்மையா உழைச்சாங்க. அதனால் தான் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க முடிஞ்சது. இதே டீம் கண்டிப்பா இன்னொரு படத்துல இணைவோம். அந்தளவுக்கு படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. எல்லாரும் பார்ட்டி கேட்டாங்க, சீக்கிரமே அவங்களுக்கு வைக்கணும்” என்றார் இயக்குநர் ராம் பிரகாஷ் ராயப்பா.