அடி மேல் அடி : தயாரிப்புக்கு குட்பை சொன்ன பிரகாஷ்ராஜ்!

Get real time updates directly on you device, subscribe now.

prakash-raj

பிரகாஷ்ராஜ் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பது மட்டுமில்லாமல் சிறந்த வில்லத்தனம் செய்யும் நடிகரும் கூட. கூடவே எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதில் பூந்து விளையாடக்கூடியவர்.

அப்படிப்பட்ட திறமைசாலி இப்போது சொந்தமாக படம் தயாரிப்பது என்றாலே யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

மயிலு, கெளரவம், உன் சமையலறையில் என தொடர்ச்சியாக அவர் தயாரித்து நடித்த படங்கள் எல்லாமே அட்டர் ப்ளாப் ஆகி பெருத்த நஷ்டத்தை கொடுத்தன.

Related Posts
1 of 3

இதனால் அப்செட்டானவர் கொஞ்ச நாளைக்கு படத்தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்க திட்டமிட்டிருக்கிறார். இனி சொந்தப்படம் எடுப்பதை குறைத்துக் கொள்வது என்பதை விட எடுக்காமல் இருப்பதே தனது உடல் நலனுக்கு நல்லது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அதையும் மீறி ஆசை பீறிட்டால் சொந்தப்படத்தில் தான் நடிக்கவே கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறாராம். அப்படித்தான் அடுத்ததாக தான் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்த பிரகாஷ்ராஜ் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு மற்ற இயக்குநர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சொந்தக் காசு சோதனை!