தமிழ் ராக்கர்ஸ் நாயே… இன்னும் 6 மாசத்துல இருக்குடா உனக்கு! : ‘சி 3’ தயாரிப்பாளர் ஆவேசம்

தமிழ்சினிமாவின் இப்போதைய பொது எதிரி திருட்டி விசிடி கூட இல்லை. அந்த இடத்தை முழுதாக நிரப்பியிருப்பவன் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்கிற புதுப்படங்களை வெளியிடுகிற இணையதளம்தான் .
தமிழ்ப்படங்கள் ரிலீசான வேகத்தில் சூட்டோடு சூடாக இந்த இணையதளத்தில் வெளியிடுவதை எல்லா சட்டங்களையும் தன்னக்குள்ளே வைத்திருக்கும் அரசுகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவனின் இந்த ‘நியூ ரிலீஸ்’ நடவடிக்கை தமிழ்த் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக கோடிக்கணக்கில் தயாராகும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் தான் தமிழ் ராக்கர்ஸின் இந்த திருட்டு சேவையால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதோடு இப்போது வெளிப்படையாக தயாரிப்பாளர்களுக்கு சவால் விடுக்கவும் ஆரம்பித்திருப்பது தான் தயாரிப்பாளர் ஞானவேல் ரா போன்ற தயாரிப்பாளர்களை கொந்தளிப்பு மனநிலைக்கு தள்ளியிருக்கிறது.
இன்று காலை சென்னையில் நடந்த விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் 6 மாதத்துக்குள் தமிழ் ராக்கர்ஸ் நாயைப் பிடித்து உள்ளே போடுவேன் என்று பேசியவர் கடுமையாகவே பேசினார்…
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது :
“விஜய் ஆண்டனியை முதல் படத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேசுவதற்கே கூச்சப்படுவார். ஆனால் அவருடைய பாடல்கள் பேசும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது அவருடைய வளர்ச்சி தெரிகிறது.
‘போகன்’ ரிலீசாகியிருக்கிறது. முதல் நாளே ஃபேஸ்புக்ல திருட்டுத்தனமா வெளியிடப்பட்ட அந்தப்படத்தை 2,60000 பேர் ஷேர் பண்ணி பார்த்திருக்காங்க. அதே மாதிரிதெலுங்குல பவன் கல்யான் நடிச்ச ஒரு படம் எடிட் ஷுட்டிலிருந்து வெளியாகிடுச்சு. இணையதளத்துல வராம டிவிடி மட்டும் மார்க்கெட்டுக்கு வந்துச்சு. அப்போ ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அந்தப்படத்தை டிவிடியில பார்க்காதீங்கன்னு வேண்டுகோள் வெச்சார். 7 நாட்கள் பொறுமையாக காத்திருந்து தியேட்டரில் போய் அந்தப்படத்தை ரசிகர்கள் பார்த்தார்கள்.
ஆனால் இங்கே ஃபேஸ்புக்ல ஒரு படத்தை ஷேர் பண்ற தைரியம் ஒருத்தனுக்கு வந்துருக்கு.
எங்களோட ‘சி 3’ படம் பிப்ரவரி 9-ம் தேதி ரிலீசாகப் போகுது. தமிழ் ராக்கர்ஸ்ன்னு ஒரு தே…பையன் அன்னைக்கு காலையில 11 மணிக்கு Live Streaming செய்யப்போறேன்னு சொல்லியிருக்கான்.
2 வருஷம் உழைப்பு சி 3யில இருக்கு. அந்த நாய் வந்து 11 மணிக்கு Live Streaming போடுறோம்னு சொல்றான். பைனான்ஸ் பிரச்சனைகளை சரிபண்ணி படம் வருமா வராதாங்கிற விஷயம் ஒரு பக்கம் இருந்தாலும் நான் கண்டிப்பா லைவ் பண்ணுவேன்னு அவன் ரொம்ப நம்பிக்கையோட சொல்றான். அதை ஒட்டுமொத்த தமிழ்சினிமா இண்டஸ்ட்ரியும் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கு.
இரண்டு நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்ல நிக்க வேணாம்னு நெனைச்சிக்கிட்டிருந்தோம். ஆனா இன்னைக்கு அந்த நாய்க்கு சொல்றேன். அவனுக்கு நான் ஒண்ணு சொல்றேன். நீ போடுறா தமிழ் ராக்கர்ஸ் நாயே 6 மாசத்துல நீ எங்க இருக்கிறியோ தேடி வந்து உன்னைத் தூக்கி உள்ள உட்கார வெச்சு அதை நான் Live Streaming பண்ணுவேன். பரதேசி நாயே.
மொத்த இண்டஸ்ட்ரியும் இப்பக்கூட உனக்கு அவனை புடிக்கல், எனக்கு இவனப் புடிக்கலேன்னு இப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருங்க, ஒருநாள் மொத்தமா டிவி சீரியல் லிஸ்ட்ல நம்ம இண்டஸ்ட்ரி சேரும். அது நடக்காம இருக்கணும்னா கொஞ்சம் நல்ல முடிவுகளை இண்டஸ்ட்ரிக்குள்ள எடுங்க.
இந்த மேடையை அதற்கு பயன்படுத்தியது தப்பு தான். இருந்தாலும் என்னோட கோபத்தை எங்க காட்டுறதுன்னு தெரியல.
மக்களுக்கும் எந்த கோபத்தை எந்த இடத்தில் காட்டணும்னு தெரியல. ஓட்டுப் போட்டு ஜெயிக்க வெச்ச ஆட்களைத் தவிர மற்ற எல்லார்கிட்டேயும் நெறைய எதிர்பார்க்கிறாங்க. எம்.எல்.ஏ எம்.பிக்கள்கிட்ட எந்த ஒரு கேள்வியையும் கேட்பதில்லை. ஆனால், ஒரு நடிகர் ஏதாவது ஒரு விழாவுக்கு வந்தால் குற்றம், வரா விட்டால் குற்றம்னு பேசுறாங்க. எதற்காக இவ்வளவு குற்றச்சாட்டுகள்னு தெரியல.
எந்த ஒரு பொதுப் பிரச்சனையாக இருந்தாலும் திரையுலகினர் தான் முதல்ல வர்றாங்க. எந்தப் பிரச்சனைக்கு நடிகர்கள் வராம இருந்துருக்காங்க? வக்கீலோ, டாக்டரோ எந்த ஒரு துறையை எடுத்துக்கிட்டாலும் தன் குடும்பத்துக்கும், தனக்கும் தான் சேர்த்து வைக்கிறாங்க.
ஆனால் சினிமா உலகினர் மட்டும் தான் எந்த ஒரு பொது விஷயம் நடந்தாலும் சரி முதல் ஆளா ரசிகர்களை கூட்டிக்கிட்டு போறதா இருந்தாலும் சரி, பாக்கெட்ல இருந்து காசை எடுத்து செலவு பண்றதுலேயும் சரி விஜய், ரஜினி, சூர்யா இப்படி எல்லா நடிகர்களும் தங்கள் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்கிறார்கள்.
இதை மக்கள் புரிஞ்சிக்கணும். ஒரு நேரத்துல வீட்ல சாப்பாடு சரியில்லேன்னா உடனே அம்மா சரியில்லேன்னு சொல்லிடுவீங்களா? அந்த நேரத்துல கொஞ்சம் உப்பு கம்மியா இருக்கும் அவ்வளவு தான். அதனால தயவுசெஞ்சு பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு வரணும்.
ஒவ்வொரு படத்திலும் போடப்படுகிற பல பேருடைய உழைப்பு ரசிகர்களை மகிழ்விக்க மட்டும் தான் போடப்படுகிறது. எல்லாருமே மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தான் எல்லோரும் வருகிறார்கள். அதற்காக பொதுமக்கள் அவங்க உழைப்புக்கு சரியான மரியாதையை தரணும். திருட்டு விசிடியை தவிர்க்கணும்” என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.