‘பப்ஜி’யில் இணையும் மூன்று ஏஞ்சல்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

‘தாதா 87′ படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கி வரும் படம் ‘பப்ஜி’ (பொல்லாத உலகில் பயங்கர கேம்).

இப்படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார்.

Related Posts
1 of 136

இவரோடு நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன், ‘பிக் பாஸ்’ ஜூலி , மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களோடு தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார்? யார்? என்பதை படக்குழு அறிவித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர், பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள். மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது.