‘மீ டூ’ கும்பலை வறுத்தெடுத்த இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்! – படவிழாவில் பரபரப்பு
எஸ்.விஜயசேகரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘எவனும் புத்தனில்லை’ படவிழாவில் ‘மீ டூ’வுக்கு எதிராக பிரபல இயக்குனர் ஆர்.வி .உதயகுமார் பேசியது பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
விழாவில் அவர் பேசியதாவது, இந்த விழாவில் பேசிய சிலர் ‘மீ டூ’ பற்றி குறிப்பிட்டார்கள். இது என்ன மீ டூ.? ஏ டூ பி டூ? இது என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை.
ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும் ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் சட்டமே அனுமதி கொடுக்கிறது. ஆனால் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உறவு கொள்வது தவறு என்கிறார்கள். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும். அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற உறவே விடுபட்டு போய் விடும்.
இதுபோல் பிரச்சனை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்பு ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களை திட்டியும், அடித்தும் விடுவேன். அதற்கு பிறகு என்னிடம் நெருங்கவே மாட்டார்கள்.
சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தரமான படங்களாக எடுங்கள். மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள். தியேட்டர் தருவார்கள்.
நான் வரி விலக்குக்காக பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை. அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான். அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்.” இவ்வாறு ஆர்.வி உதயகுமார் பேசினார்.
விழாவில் இயக்குனர் தளபதி நடிகர்கள் நபி நந்தி, சரத், சுவாசிகா எலிசபெத் சுப்புராஜ் இயக்குனர் எஸ்.விஜயசேகரன், இசையமைப்பாளர் மரியா மனோகர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.