‘சர்கார்’ படத்துடன் மோதுவது ஏன்? – விஜய் ஆண்டனி ஓப்பன் டாக்

Get real time updates directly on you device, subscribe now.

‘காளி’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார்.

புதுமுக இயக்குனர் கணேஷா இயக்கியிருக்கிறார். டைட்டிலுக்கு ஏற்ற மாதிரியே என்ன தளபதியோட மோத வர்றீங்க? திமிரா என்று விஜய் ரசிகர்கள் கேட்கிற அளவுக்கு ஆகி விட்டது அதன் ரிலீஸ் தேதி.

ஆமாம், சர்கார் ரிலீசாகும் தேதியான நவம்பர் 6-ம் தேதி தீபாவளியன்று தான் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படமும் ரிலீசாகிறது.

ஆனால் யாருக்கும் போட்டியாக என்னுடைய படம் வரவில்லை. இதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றார் விஜய் ஆண்டனி.

Related Posts
1 of 25

தொடர்ந்து அவர் பேசும்போது, ”தனி மரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபாரா ரீதியாக சரியாக போகவில்லை.

படத்தின் எல்லா வேலைகளும் முழுமையாக முடிந்து விட்டது. கதையும் தீபாவளியையொட்டி நடைபெறுவது போல இருப்பதால் தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குனர் கணேஷா விரும்பினார். அதனால் தான் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.

இந்த படத்தில் எனக்கு ரொமான்ஸ் இல்லை, ஆனால் இனி வரும் படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்காக ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க தனியாக பயிற்சி எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். உங்களுக்கும் தெரிந்தால் எனக்கு டிப்ஸ் கொடுங்கள். இதை நான் விளையாட்டுக்காக சொல்லவில்லை. சீரியஸாகத்தான் சொல்கிறேன்” என்றார்.

சந்திப்பில் நாயகி நிவேதா பெத்துராஜ், இயக்குனர் கணேஷா, தயாரிப்பாளர் டி.சிவா, விசுவல் எஃபெக்ட்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடன இயக்குனர் தஸ்தா, பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகர்கள் கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.