10 கோடி நிவாரண நிதி? : எப்படியெல்லாம் ரஜினிக்கு நெருக்கடி வருது பாருங்க..!

Get real time updates directly on you device, subscribe now.

rajini2

ரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சென்னை மக்களை அந்த இன்னல்களிலிருந்து காப்பாற்ற எல்லா இடங்களில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளன.

தொழிலதிபர்களும் தங்கள் பங்குக்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து கோடிக்கணக்கில் நிவாரண நிதியை அளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திரையுலகைப் பொருத்தவரை விஷால், கார்த்தி, தனுஷ், ஆர்யா என முன்னணி இளம் ஹீரோக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து செய்து வருகிறார்கள்.

அந்த செய்திகள் எல்லாம் உண்மை என்பதை அவ்வப்போது வரும் புகைப்பட ஆதாரங்கள் அதை உறுதிபடுத்துகின்றன.

ஆனால் உறுதிப்படுத்தப்படாத இன்னொரு செய்தியை திடீரென்று இன்று மாலை வாக்கில் சில வட இந்திய ஊடகங்கள் கிளப்பி விட்டிருக்கின்றன.

Related Posts
1 of 63

கோவாவில் கபாலி படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை மட்டும் ரத்து செய்திருக்கிறார். மாறாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. அதோடு யாரையும் சந்தித்து ஆறுதலும் சொல்லவில்லை.

அப்படிப்பட்டவர் தனது ராகவேந்திரா ட்ரஸ்ட் மூலமாக 10 லட்சம் ரூபாயை நடிகர் சங்கம் மூலமாக கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதற்கான ஆதாரக் கடிதமும் நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது.

அதோடு ரஜினி மேலும் 10 கோடி ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசிடம் கொடுத்திருக்கிறார் என்று இப்போது கிளப்பி விட்டிருக்கும் செய்தி தான் எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் இப்படி அவர் கொடுத்ததாக வரும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதே அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கும் செய்தி.

இன்னொரு பக்கம் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டால் அதற்காகவே ரஜினி பத்து கோடி ரூபாய் நிவாரணத் தொகையை கொடுப்பார் என்று அவர் மீது காழ்ப்புணர்ச்சியில் இருப்பவர்களால் மீடியாக்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறதோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த ‘நெருக்கடி’க்கு ரஜினி தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.