டைரக்டர் ஆகிறார் ஜெயம் ரவி – ஹீரோ யார் தெரியுமா?

Get real time updates directly on you device, subscribe now.

ருவாரம் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்கு சமம் என்றாகி விட்ட சூழலில் ஒரு படம் 50 நாட்கள் ஓடினால் சந்தோஷம் இருக்காதா? அந்த சந்தோஷத்தை நம்மோடு கேக் வெட்டி கொண்டினார்கள் ஹீரோ ஜெயம் ரவி உள்ளிட்ட ‘கோமாளி’ படக்குழுவினர்.

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்தார்.

சந்திப்பில் ஜெயம் ரவி பேசியதாவது, ”நல்ல படம் கொடுத்தால் நீங்கள் கொண்டாடுவீர்கள், பாராட்டுவீர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த வெற்றி நிறைவை தந்திருக்கிறது.

Related Posts
1 of 143

தனி ஒருவனில் வராத டயலாக் ஒன்று இருந்தது. நேர்மையாய் இருப்பது என்பது நமது கடமை அது சாதனை ஆகாது. நாம் நல்லவனாக இருக்க வேண்டியது கடமை. நான் மகிழ்ச்சியாக வேலை செய்வதால் தான் வெற்றி தேடி வருகிறது. செய்யும் வேலையை சந்தோஷத்தோடு செய்தால் போதும். படத்தில் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள்.

நான் நிறைய புதிதாக முயற்சிக்கிறேன் அதை ஆதரவு தந்து ரசிப்பது ஆடியன்ஸ் தான். அவர்களால் தான் வித்தியாசமான படம் செய்கிறேன். இந்தப் படத்தில் யோகிபாபு தான் வேண்டுமென்று நான் தான் சொன்னேன். அவர் மிகச்சிறந்த நண்பராகி விட்டார். அவரை வைத்து நான் படம் இயக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறேன் பார்ப்போம்” என்றார்.