‘கபாலி’ ரிலீஸ் : கவுண்ட்டவுன் ஸ்டார்ட்..!

Get real time updates directly on you device, subscribe now.

kabali1

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் ‘கபாலி’க்கு படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்பார்ப்பு மீறிக்கிடந்தது.

ரஜினி நடிக்கிறார் என்கிற சந்தோஷம் ஒன்றாக இருந்தாலும், அந்தப் படத்தை இயக்குவது இளைய இயக்குநர் ரஞ்சித் என்பது தான் கூடுதல் சந்தோஷம்.

ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசான ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ இரண்டு படங்களும் ரசிகர்கள் கவர்த்திருந்தது தான் இதற்கு முக்கிய காரணம்.

முன்னதாக இந்த மே மாதம் 1ம் தேதி யூ-ட்யூப்பில் ரிலீசான ‘கபாலி’ படத்தின் டீஸரே மிக அதிக பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது என்று இந்திய சினிமாவில் இதுவரை எந்தப்படமும் செய்யாத சாதனையை செய்தது.

Related Posts
1 of 64

அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடிய அஜித்தை விட ‘கபாலி’ சம்பந்தப்பட்ட செய்திகள் தான் நாள் முழுக்க ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கிலும் இருந்தது. அந்தளவுக்கு ‘கபாலி’ டீஸருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள்.

டீஸருக்கே இப்படியென்றால் படம் ரிலீசானால் ரசிகர்கள் சந்தோஷத்துக்கு சொல்லவா வேண்டும்? டீஸர் வந்து விட்டது. அடுத்து படம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் செய்தி இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆமாம், ‘கபாலி’ திரைப்படம் வருகிற ஜுலை 1-ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது.

தனது வழக்கமான பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் என பழைய டீமை கை கழுவிவிட்டு இளையதலைமுறையினருடன் ரஜினிகாந்த் கை கோர்த்திருப்பதால் இதுவரை எந்த ரஜினி படங்களுக்கும் இல்லாத வரவேற்பு இந்த ‘கபாலி’க்கு வரும் என்பது மட்டும் நிஜம்.

சும்மா இல்லடா… கபாலிடா… நெருப்புடா…