இலங்கைப் பயணம் ரத்து; இனிமேல் தடுக்காதீர் : ரஜினி வேண்டுகோள்

Get real time updates directly on you device, subscribe now.

Rajini4

திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா, 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவுள்ளது.

லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகா பெயரில், ஞானம் அறக்கட்டளை சார்பில், இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம், புளியங்குளம் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளை, உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, யாழ்ப்பாணத்தில் வரும் ஏப்.9ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Related Posts
1 of 77

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அவரின் இந்த பயணத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி ரஜினியின் இலங்கைப் பயணத்திற்கு வரவேற்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்து செய்து விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதோ அந்த அறிக்கை :

rajini rajini1 rajini2