‘இனிமே இப்படித்தான்’ படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!

Get real time updates directly on you device, subscribe now.

santhanam

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்த காமெடி நடிகர் சந்தானம் தானே தயாரித்து நடித்திருக்கும் புதிய படம் தான் ‘இனிமே இப்படித்தான்.’

சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய சந்தானம் ”என் படத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய நான் யாரிடமும் நிற்கப் போவது இல்லை, நானே சொந்தமாக ரிலீஸ் செய்யப்போகிறேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

அதோடு சிம்பு, ஆர்யா, உதயநிதி மூன்று பேர்கள் தான் அவர்களுடைய படங்களில் என் கேரக்டர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார்கள். அதனால் இனி அவர்கள் படங்களில் மட்டுமே காமெடி கேரக்டர்களில் நடிப்பேன்” என்றார்.

Related Posts
1 of 10

உங்கள் நண்பரான உதயநிதி ஸ்டாலின் கூட இந்தப்படத்தின் ரிலீஸுக்கு உதவ செய்யவில்லையா? என்று கேட்டபோது, ”படத்தின் ரிலீஸ் தேதிக்கும் இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் உதயநிதி ஸ்டாலினே இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்தாலும் செய்யலாம்” என்றார்.

அவர் சொன்னபடியே தற்போது ‘இனிமே இப்படித்தான்’ படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெய் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. இதை நேற்றுமுன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.

சந்தானத்தினிடம் பல வருடங்கள் உதவியாளர்களாக இருந்த முருகன் – பிரேம்ஆனந்த் இணைந்து முருகானந்தம் என்ற பெயரில் படத்தை இயக்கியுள்ளனர்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்புவரை ‘இனிமே இப்படித்தான்’ பட விளம்பரங்களில் ரெட்ஜெயண்ட் பெயர் இடம்பெறவில்லை. தற்போது வரும் வரும் விளம்பரங்களில் ‘ரெட்ஜெயண்ட்’ பெயர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.