சயின்ஸ் பிக்சனில் கலாய்க்கப் போகும் சந்தானம்!
இனியும் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? என்கிற யோசனையில் இருந்த சந்தானத்துக்கு ‘ஏ 1’ படத்தில் கிடைத்த வெற்றி தொடர்ந்த அந்த பாதையில் உற்சாகத்தோடு பயணப்பட வைத்திருக்கிறது.
ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் அது காமெடி கலந்த படமாக இருந்தால் மட்டும் போதுமென்று ரசிகர்கள் அவருக்கு புரிய வைத்து விட்டார்கள்.
அதை முழுமையாக உணர்ந்தவர் போல இனி தான் கமிட் செய்யும் படங்கள் எல்லாமே அவ்வாறாகவே இருக்கும் படி இயக்குனர்களிடம் சொல்கிறாராம்.
அந்த வகையில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத புதுப்படம் ஒன்றில் மூன்று வேடங்களில் ஹீரோவாக நடிக்கிறார் சந்தானம்.
சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் திரைக்கதை முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும்படி இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். அதுமட்டுமல்ல, இதுவரை வெளியான சந்தானத்தின் காமெடிகளில் இந்தப்படம் அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள்.
அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்த கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இவரோடு இணைந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்தை தயாரிக்கிறார்.
வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு இப்படத்தின் தலைப்பை முறைப்படி அறிவிக்க இருக்கிறது படக்குழு.
இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதோடு இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான். தமிழ்சினிமாவில் பல வெற்றிபெற்ற திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்த பிரபல எழுத்தாளர் கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார்.
வெகுவிரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சந்தானம் படங்களில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் வருகிற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.