சினிமாவில் ஜெயிக்க என்ன தேவை? : சொல்கிறார் விஷால்

Get real time updates directly on you device, subscribe now.

Vishal

ஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று (19.07.2015) மாலை 6 மணி அளவில் திருச்சியில் உள்ள சங்கம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர்கள் நாசர், விஷால், பொன்வண்ணன்,கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவில் நாசர், விஷால், பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் ஆடியோவை வெளியிட அதனை ‘அஞ்சுக்கு ஒண்ணு’ படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

Related Posts
1 of 2

விழாவில் பேசிய நடிகர் விஷால் ”இது போன்று சிறிய பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவர வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளிவந்த பின்பு தான் அது சிறிய படமா பெரிய படமா என்று தீர்மானிக்கும். அதே போல் புதுமுக நடிகர்கள் பொறுமையும் நேர்மையும் கடைப்பிடித்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறலாம். அவ்வாறு தான் நானும் வெற்றி பெற்றேன்” என்று நடிகர் விஷால் கூறினார்.

முன்னதாக பேசிய நடிகர் கருணாஸ் ”இந்த விழாவை நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று முதலாவதாக கலந்து கொண்ட விழாவாகவே கருதுகிறேன் . நாங்கள் நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்றதும் சின்ன பட்ஜெட் படங்களை ஊக்குவிப்போம், அதே போல் சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்தது 100 – 150 திரையரங்குகள் கிடைக்க வழி செய்வோம்” என்று உறுதி அளித்தார் .