ரிலீசுக்கு ரெடியாகும் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு 2’

Get real time updates directly on you device, subscribe now.

காமெடியனாக கலக்கி வந்த சந்தானம் ஹீரோவான பிறகு கடனாளி ஆகி விட்டார் என்பது தான் கோடம்பாக்கம் குலுங்கி குலுங்கி அழுது கொண்டே பரிமாறிக் கொள்ளும் செய்தி.

ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘இனிமே இப்படித்தான்’ என ஒரு சில படங்களே சந்தானத்துக்கு நிம்மதியைக் கொடுத்தது.

இருந்தாலும் அவர் நடிப்பில் தயாரான ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் தயாராகி பல ஆண்டுகள் ஆகியும் ரிலீசாகாததால் வருத்தப்பட்ட சந்தானம் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை தானே தயாரித்து நடித்தார்.

Related Posts
1 of 9

முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு நகைச்சுவையோடு எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது.

அதன் தொடக்கமாக ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் டீசரை வருகிற அக்டோபர் 29ம் தேதி வெளியிடப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.