ரெண்டு ஷோ கூட முடியல; அதுக்குள்ள இப்படி ஒரு ரேட்டிங்! : உதயநிதி அப்செட்

Get real time updates directly on you device, subscribe now.

sib

மீபகாலமாக கோல்வுட்டில் ரிலீசாகிற புதுப்படங்கள் வசூலின் அதிக பட்ச வேலிடிட்டி மூன்றே மூன்று நாட்கள் தான்.

அதனால் தான் படம் பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள் என்று விழா மேடை ஒன்றில் பொத்தாம் பொதுவாக கேட்டுக் கொண்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால்.

அவரைப் போலவே ”இந்தப்படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் செய்யுங்கள், இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள்” என்று தன்னுடைய ”சரவணம் இருக்க பயமேன்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சொன்னார் உதயநிதி.

இவர்களின் கோரிக்கையை ரெகுலர் ஊடகங்கள் கூட பரிசீலனை செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் சொந்தக் காசைப் போட்டு தியேட்டரில் போய் படம் பார்த்து விமர்சனம் பண்ணுகிற நெட்டிஷன்கள் கேட்பார்களா?

Related Posts
1 of 7

கேட்கவே மாட்டோம் என்று நிரூபித்து விட்டார்கள் மேற்படி புண்ணியவான்கள்.

ஆமாம், இன்று ரிலீசாகியிருக்கும் உதயநிதியின் ”சரவணன் இருக்க பயமேன்” படத்தைப் பற்றி சமூகவலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்திருக்கிறார்கள் நெட்டிஷன்கள்.

ஒருவர் ”வெயிலுக்கு ஏசியில் உட்கார்ந்து விட்டு வரலாம்” என்று படத்தைப் பற்றி நக்கலாக கமெண்ட் அடிக்க, இன்னும் சிலரோ, ”படத்துல கதைன்னு ஒண்ணு இல்லவே இல்ல, மியூசிக் ரொம்பக் கேவலமா இருக்கு, அவுட் டேட்டட் காமெடியால செமக் கடுப்பைப் கிளப்புகிறார்கள்” என்றும் கமெண்ட் அடித்திருக்கிறார்கள். மேலும் 5 க்கு 1.5 என்ற குறைந்த ரேட்டிங்க்கையெல்லாம் கொடுத்து படத்தின் ரிசல்ட்டை சொல்லி வருகிறார்கள்.

ரெண்டு ஷோ கூட முடியாத நிலையில் படத்தைப் பற்றி வரும் இந்தவகை நெகட்டீவ் கமெண்ட்டுகள் துபாயில் இப்படத்தின் பிரீமியர் ஷோவுக்காக போயிருக்கும் உதயநிதியை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறதாம்!

சொன்னாக் கேட்டுக்கிற ஆளுங்களா நெட்டிஷன்கள்?