சர்கார் சர்ச்சையால் ‘பேட்ட’ படத்துக்கு சிக்கல்!

Get real time updates directly on you device, subscribe now.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ரிலீசான சுமாரான ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்த இலவசப் பொருட்கள், கோமள வல்லி போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதன் விளைவாக படம் ஓடும் தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்றவைகளை கிழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆளுங்கட்சியினரின் இந்த எதிர்ப்பை கொஞ்சமும் எதிர்பார்க்காத படக்குழுவினர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவித்து அதன்படி காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன.

Related Posts
1 of 107

சர்காருக்கு எதிராக ஆளுங்கட்சியின் இந்த எதிர்ப்பை கவனித்த ரஜினியின் பேட்ட படக்குழு இப்போது உஷாராக ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரஜினி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திலும் ஏதாவது சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்களோ, காட்சிகளோ இருந்தால் ரிலீஸ் நேரத்தில் பிரச்சனை வரலாம் என்று உஷாரான படக்குழு இப்போதே படத்தில் ஏதாவது சென்சிடீவ்வான அரசியல் வசனங்கள் இருந்தால் அதை பட்டி பார்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறதாம்.