மதுரையை விட்டா சசிகுமாருக்கு வேற வழியே இல்லையாம்! : அடக்கடவுளே…
சில சென்டிமெண்ட்டுகளை சினிமாவிலிருந்து அகற்றி எறிவது என்பது தஞ்சை பெரிய கோவிலை நகர்த்துவது போன்ற ரொம்பக் கடினமான காரியம்.
ரசிகர்களே போதும் போதும் என்று சொன்னால் கூட மீண்டும் மீண்டும் ஒரே பேக் ட்ராப்பில் படங்களை எடுத்துத் தள்ளுவார்கள் இயக்குநர்கள்.
அதோடு ஒரு ஃபார்முலா படம் ஹிட்டாகி விட்டால் போதும், அடுத்தடுத்து ஒரு டஜன் படங்கள் அதே ஃபார்முலாவில் க்யூ கட்டி நிற்கும். இன்னும் சிலருக்கோ அந்த ஃபார்முலாவில் எடுத்த படங்கள் தான் செண்டிமெண்ட்டாக ஹிட்டாகும்.
அதனால் அவர்கள் அந்த ஏரியாவை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.
எப்படி மதுரையையும் மல்லிகைப்பூவையும் பிரிக்க முடியாதோ? அப்படித்தான் மதுரையையும் டைரக்டர் சசிகுமாரையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது.
மதுரையை கதைக்களமாகக் கொண்டு ரிலீசான படங்கள் எல்லாமே சசிகுமாருக்கு செண்டிமெண்ட்டாக ஹிட்டாகியிருக்கின்றன.
இடையில் சென்னையை கதைக்களமாகக் கொண்டு இயக்கிய ‘ஈசன்’ படம் தோல்விப்படமாகத்தான் அமைந்தது. பொங்கலுக்கு ரிலீசான ‘தாரை தப்பட்டை’ படமும் தோல்விப்படம் என்பது உறுதியாகி விட்டது.
இதனால் தனக்கு மதுரை செண்டிமெண்ட் கை கொடுத்து வருவதால் மீண்டும் ஒரு மதுரைப் பின்னணிப் படத்தில் நடித்து வருகிறார்.
அவரை வைத்து ஏற்கனவே ‘குட்டிப்புலி’ ஹிட் படத்தைக் கொடுத்த டைரக்டர் முத்தையா இப்போது ‘வெற்றிவேல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சசிக்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க மதுரை வட்டாரக் கதையாம். ‘தாரை தப்பட்டை’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் அந்த வெற்றிடத்தை இந்தப்படம் நிரப்பும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார் சசிக்குமார்.
நம்பிக்கை அதானே எல்லாம்..?