நயன்தாரா ரூட்டில் ஸ்ரீதிவ்யா : பார்த்து சூதானமா இருந்துக்கம்மா…

ச்ச்சே… இத்தனை நாளா இந்தக் காந்தக்குரலை ஏன் டைரக்டர்கள் தங்களோட படங்கள்ல யூஸ் பண்ணல என்று ரசிகர்கள் ஏக்கப்படுகிற அளவுக்கு ‘நானும் ரவுடி தான்’ படத்தில் சொந்தக்குரலில் பேசி அசத்தியிருந்தார் நடிகை நயன் தாரா.
ஒருபக்கம் லட்சுமிமேனன், ரம்யா நம்பீஸன் உள்ளிட்ட நடிகைகள் பின்னணிப் பாடல்கள் பாடி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வரும் தருணத்தில் இன்னொரு பக்கம் நயன்தாரா மாதிரியான முன்னணி நடிகைகளே தாங்கள் நடித்த படங்களில் தங்கள் கேரக்டருக்கு தாங்களே டப்பிங் வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே தமன்னாவும் சொந்தக் குரலில் டப்பிங் பேச முடிவு செய்திருக்கிற நிலையில் இப்போது நயன்தாரா வழியில் தானும் நடிக்கின்ற படங்களில் சொந்தக்குரலில் பேச முடிவு செய்திருக்கிறாராம் ‘ஊதாக்கலரு ரிப்பன்’ புகழ் ஸ்ரீதிவ்யா.
அதற்கு முன்னோட்டமாக ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் சொந்தக்குரலில் பேசி நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா அந்தக்குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அடுத்தடுத்த படங்களில் தொடர முடிவு செய்திருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்ட அவரது நலம் விரும்பிகள் நயன்தாரா ரூட்டு கொஞ்சம் ஏடாகூடமான ரூட்டாச்சே… பார்த்து கொஞ்சம் சூதானமா இருந்துக்கம்மா என்று அட்வைஸ் செய்திருக்கிறார்களாம்.