‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ பாடலில் சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய் சேதுபதி

Get real time updates directly on you device, subscribe now.

ஞ்சித் ஜெயக்கொடி டைரக்‌ஷனில் ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படம் ”இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘கண்ணம்மா’ பாடலை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

சாம் சி எஸ் இசையமைத்திருக்கும் இப்பாடலைப் பற்றி இயக்குனர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது, “கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் சரியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் ‘ஏய் கடவுளே’ படத்தில் முக்கியமான இடத்தில் வரும்.

Related Posts
1 of 30

குறிப்பாக, விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார். இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அதன்படி, ‘ஏய் கடவுளே’ அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கவின் ஒளிப்பதிவில், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ஹரீஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஜோடியுடன் மாகாபா ஆனந்த், பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ புகழ் சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.