செல்வராகவனுக்கே கால்ஷூட் இல்லை : என்ன பண்றது? தனுஷோட டைம் அப்படி!
சிம்பு நடிப்பில் கான் படத்தை ஆரம்பித்தார் இயக்குநர் செல்வராகவன். ஆரம்பித்த புதிதில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் விறுவிறுவென்று போய்க்கொண்டிருந்த படப்பிடிப்பு திடீரென்று பைனான்ஸ் பிரச்சனையால் நிறுத்தப்பட்டு படமே ட்ராப்பானது.
இனி என்ன செய்வது என்று யோசித்த போது தான் தன் தம்பி தனுஷை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார்.
அதற்கான கதை விவாதம் உள்ளிட்ட ஆரம்பகட்ட வேலைகள் முடிந்த நிலையில் தனுஷிடம் போய் நின்ற செல்வராகவனுக்கு காலச்சூழல் தந்தது என்னவோ ஏமாற்றம் தான்.
பிரபு சாலமனின் மிரட்டல் படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ராஞ்சனா பட இயக்குநருடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களுக்கு கால்ஷூட் கொடுத்து விட்டார்.
இதனால் தற்போதையை சூழலில் தனுஷை வைத்து படமெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட செல்வராகவன் தனுஷுக்காக காத்திராமல் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து திகில் படமொன்றை இயக்குவது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
தனுஷின் கால்ஷூட் எப்போது கிடைக்குமோ? அப்போது மீண்டும் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் படம் வருவது உறுதி!