சந்தோஷ் நாராயணனை கழட்டி விட்ட செல்வராகவன் : எல்லாம் யுவன் பாசம்ப்பா…

Get real time updates directly on you device, subscribe now.

yuvan

செல்வராகவன் இயக்கிய எல்லா படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளராக இருந்து வந்தார்.

அந்தளவுக்கு டீப்பான நட்புடன் இருந்தார்கள். ஆனால் யார் கண்பட்டதோ இருவரும் ‘புதுப்பேட்டை’ படத்தில் நிரந்தரமாகப் பிரிந்து விட்டார்கள்.

அதன்பிறகு செல்வராகவன் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களில் பணியாற்றினார்.

Related Posts
1 of 12

தனது மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் கூட தெலுங்கு இசையமைப்பாளரைத்தான் கமிட் செய்திருந்தார் செல்வா.

அந்தளவுக்கு செல்வராகவன் – யுவன் கூட்டணி இனி இணைய வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது தனது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் மீண்டும் தனது பழைய தோஸ்த்தான யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைகிறாராம் செல்வராகவன்.

எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் மீண்டும் யுவனுடன் கூட்டணி போடுகிற வாய்ப்பு அமைந்ததால் கபாலி பிஸியை காரணம் காட்டி சந்தோஷ் நாராயணனை நேக்காக கழட்டி விட்டு விட்டார் செல்வ ராகவன்.