ரொம்பநாளா இருந்துச்சாம்… : ஸ்ருதியின் கனவை நிறைவேற்றிய கமல்ஹாசன்!
தன் மூத்த மகள் ஸ்ருதிஹாசனை உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகத்தான் அறிமுகப்படுத்தினார் உலக நாயகன் கமல்ஹாசன்.
ஸ்ருதிக்கு இசைமீது தான் தீராத ஆர்வம். அதனால் அவர் இசைத்துறையில் தான் சாதனை படைப்பார் என்றெல்லாம் புழங்காகிதம் அடைந்தார்.
ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழில் நடிக்க ஆரம்பித்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்திப் படங்களில் எவ்வளவு தூரத்துக்கு முடியுமோ? அவ்வளவு தூரத்துக்கு ஆடைக்குறைப்பு செய்து நடிக்க ஆரம்பித்தார்.
அன்றிலிருந்து ஸ்ருதியின் மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கிறது. கைவசம் அரை டஜன் படங்களை வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிக்கு ஒரு படத்திலாவது அப்பா கமலுடன் சேர்ந்து நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.
பல பேட்டிகளில் இந்த தனது விருப்பத்தை சொல்லி வந்த நிலையில் இப்போது அவருடைய ஆசை புதுப்படம் ஒன்றில் நிறைவேறப்போகிறது.
பிரபல மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கப்போகும் படத்தை கமல் தயாரித்து நடிக்கிறார். அப்பா – அம்மா விளையாட்டு என்று டைட்டில் கொஞ்சம் ஏடாகூடமாக இருந்தாலும் இது அக்மார்க் காமெடிப்படம். இதில் தான் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கப் போகிறாராம் ஸ்ருதி.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு சந்தோஷத்தில் இருக்கும் ஸ்ருதி எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.