ஸ்ருதிஹாசன் – கௌதமி மோதல் முற்றுகிறது… ! : கவலையில் கமல்

Get real time updates directly on you device, subscribe now.

shruthi1

மல்ஹாசன் இயக்கி நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் ஏற்பட்ட காஷ்ட்யூம் பஞ்சாயத்து இப்போது கமல்ஹாசன் குடும்பத்துக்குள் விரிசல் ஏற்படுகிற அளவுக்கு வீரியமாகிக் கிடக்கிறது.

எந்த திரையுலக விழாக்களில் கலந்து கொண்டாலும் கூடவே கெளதமியையும், தனது இரண்டு மகள்களுடன் கலந்து கொள்வார் கமல்ஹாசன்.ஸ்ருதிஹாசன் – அக்‌ஷரா ஹாசன் இருவருமே கெளதமியுடன் அன்போடு தான் பழகி வந்தனர்.

இந்த நிலையில் தான் கமலின் ‘விஸ்வரூபம்’ அவருக்கு காஸ்டியூம் டிசைனராக வேலையை ஆரம்பித்தார் கெளதமி. அந்தப் படத்தில் பேசப்பட்ட விஷயங்களில் காஸ்ட்யூமும் ஒன்று. இதனால் தனது அடுத்த படமான ‘சபாஷ் நாயுடு’ படத்திலும் கெளதமியையே அந்த வேலைக்கு நியமித்தார் கமல். இதே படத்தில் நடிக்கும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுக்கும், கெளதமிக்கும்காஸ்ட்யூம் தொடர்பாக அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். கௌதமி கொடுக்கும் காஸ்டியூம்களை ஸ்ருதி ஏதாவது குறை சொல்லி, தேவையின்றி நிராகரித்து வந்துள்ளார்.

Related Posts
1 of 12

அதோடு இந்தச் செய்தி மீடியாக்களில் கசியவும் எனக்கும், கெளதமிக்கும் எந்த உரசலும் இல்லை என்று ஸ்ருதிஹாசன் சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது.ஆனால் அப்படி வந்த அறிக்கை முற்றிலும் பொய் என்பதே அவரே நிரூபித்திருக்கிறார்.

சமீபத்தில் நிருபர் ஒருவர் அந்த காஸ்ட்யூம் பிரச்சனைக்குப் பிறகு கெளதமியை சந்தித்தீர்களா? என்று ஸ்ருதியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன், எனக்கு என் அப்பா, தங்கை, நண்பர்களை பார்க்கவே சிரமப்பட்டு நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது, இதில் எங்கே போய் நான் மற்றவர்களைப் பார்ப்பது என்று கூறியிருக்கிறார்.

ஸ்ருதியின் இந்தப் பதில் அவருக்கும், கெளதமிக்குமிடையே ஏற்பட்டிருக்கும் உரசலை உறுதிப்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.

வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து மருத்துவ ஓய்வில் இருந்த கமல் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறி வருகிறார். இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் – கெளதமியின் இந்த திடீர் உரசல் கமலுக்கு பெரும் கவலையைக் கொடுத்திருக்கிறதாம்.