சசி இயக்கத்தில் சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’
மனித உணர்வுகளை அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்சிப்படுத்துவதில் வல்லவர் இயக்குனர் சசி.
‘சொல்லாமலே’ படம் தொடங்கி ‘பிச்சைக்காரன்’ வரை அவர் இயக்கிய எல்லா படங்களுமே மனித உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவே இருந்தது. தற்போது அவருடைய இயக்கத்தில் முன்னணி பைனான்சியர்களில் ஒருவரான ரமேஷ் பி பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.
அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் சசி.
இப்படத்தில் அக்காவாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான லிஜோ மோள் தமிழில் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.
இதில் முதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிகர் சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். மேலும் காஷ்மீரா , மதுசூதனன், நக்கலைட் யூடுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.