தி வாரியர்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

எமோஷ்னலுக்கு ஆனந்தம், ஆக்‌ஷனுக்கு சண்டைக்கோழி, காதலுக்கு பையா என தமிழ்சினிமாவை தன் திரைமொழியால் கட்டி ஆண்டவர் லிங்குசாமி. அவருக்கு ஆண்டவர் ஒரு படம் செய்து..அப்புறம் லிங்கு பஞ்சரான வரலாறெல்லாம் பெரும் ரணம் மிகுந்தவை

நல்ல இயக்குநர் என வலம் வந்த லிங்கு சில வருடங்கள் கழித்து இயக்கியிருக்கும் படம் தி வாரியர்.

இந்தப்படத்தின் கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. ஹீரோ வில்லன் ஈகோ மோதல் என ஒருவரியில் சுருட்டிடலாம் கதையை.

ராம் பொத்தினேனி நடிப்பில் & துடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார். அவருக்கு ஈடான வில்லனாக ஆதி படத்தைத் தாறுமாறாக தாங்குகிறார். கீர்த்தி ஷெட்டிக்கி அழகும் நடிப்பும் அழகாக வாய்த்திருக்கிறது. நதியா ஓரிரு காட்சியில் கவர்கிறார்

தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் பொறி பறக்க வைக்கிறார். பின்னணி இசையிலும் துள்ளல் குறையவில்லை. ஒளிப்பதிவில் ஓர் தனித்துவ எனர்ஜி தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம் பிரமாதமாக வந்திருக்கிறது. மேக்கிங்கில் லிங்கு பழையபடியே மாஸ் காட்டியிருக்கிறார்

சைலண்ட் டாக்டர் வைலண்ட் போலிஸாக மாறும் தருணத்தை வைத்து லீட் எடுக்கும் திரைக்கதை பல இடங்களில் சறுக்கி சறுக்கி விழுகிறது. அதனால மொத்தமாக கூடி வரவேண்டிய எனர்ஜி சுத்தமாக வரவில்லை. படமாக்கலுக்கு மெனக்கெட்டதை திரைக்கதையாக்கத்திற்கு மெனக்கெட்டிருந்தால் வாரியார் இன்றைய ஜெனரேசனை வாரியிருப்பார். ஜஸ்ட் மிஸ்

2.5/5