அரசியலுக்கு வருகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? – அட, அந்த சுவர் விளம்பரம் அதுக்காக இல்லையாம்ப்பா!

Get real time updates directly on you device, subscribe now.

மீபத்தில் ஒரு சுவர் விளம்பரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

‘இளைஞர்களை வழி நடத்த.. தமிழகத்தில் மாற்றம் காண..’ என ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்று எழுதப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற எழுதப்பட்டிருந்தது.

ஏற்கனவே சில தமிழ்ப்பட முன்னணி ஹீரோக்கள் அரசியல் ஆசையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆர்.ஜே.பாலாஜியும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்து விட்டாரோ என்று ரசிகர்கள் சந்தேகப்பட்டனர்.

பரபரப்பை ஏற்படுத்திய ஆர்.ஜே.பாலாஜியின் சுவர் விளம்பரம்!
Related Posts
1 of 2

அதோடு மட்டுமில்லாமல் பிரபல அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத்தையும் ஆர்.ஜே.பாலாஜி நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது அந்த சந்தேகத்தை மேலும் உறுதி செய்யும் விதமாக இருந்தது.

ஆனால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஆர்.ஜே.பாலாஜி அந்த சுவர் விளம்பரம் குறித்து வாய் திறந்திருப்பது அடச்சே… கடைசியில அந்த விளம்பரம் இதற்குத்தானா என்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

கன்னடத்தில் வெளியான ‘ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் படத்தைத் தொடங்கும் போது ப்ரொமோஷனுக்காக இந்த அரசியல் கட்சி விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத்தெரிய வந்திருக்கிறது.

மே 18-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜியே அதிகாரப்பூர்வமாக இந்தப் படத்தில் நடிப்பது பற்றித் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.