சிம்புவுக்கு கால்கட்டு! : டி.ஆர் குடும்பத்தினர் முடிவு
இன்றைக்கும் டி.ஆரைக் கூப்பிட்டு கேட்டாலும் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றெடுக்க ‘பீப்’ சாங்க்கைப் பற்றி ஃபீல் பண்ணி பேச ஆரம்பித்து விடுவார்…
”சின்னப் பசங்க ஜாலியா இருக்கும் போது டம்மியா வார்த்தைகளைப் போட்டு சாங் கம்போஸ் பண்ணியிருக்காங்க… , அதை எவனோ வேண்டாதவன் எடுத்து லீக் பண்ணிட்டான், அதுல என்ன தப்பு?” என்று பெத்த பிள்ளையை விட்டுக் கொடுக்காமல் பேசுவார்.
ஆனால் பிள்ளைக்கோ நயன்தாரா, ஹன்ஷிகா என கோலிவுட்டின் முன்னணி நடிகைகளோடு நிஜ வாழ்க்கையில் இணையும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தும், தனது வழக்கமான ‘டார்ச்சர்’ புத்தியால் இரண்டு பேரையும் பிரிந்து தனி மரமாகி விட்டார்.
இரண்டு காதல் தோல்விகளில் துவண்டு போனவர் இமயமலை, காசி, தியானம், பக்தி, முக்தி என முற்றும் துறந்த முனிவர் போல தத்துவங்களை உதிர்க்கும் அளவுக்கு மன வேதனையில் இருந்தார் என்பதை பல டிவி பேட்டிகளில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது.
இப்படி நிஜ வாழ்க்கையில் தன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காத விரக்தியில் இருந்ததாலோ என்னவோ, அந்த பீப் சாங்கில் மனதில் இருந்த மொத்த கோபத்தையும் கொட்டி விட்டார்.
விஷயம் அதுவல்ல… தனிமையில் இருப்பதால் தானே இப்படிப்பட்ட சிக்கல்களை எல்லாம் சிம்பு சந்திக்க வேண்டியிருக்கிறது. அதனால் அவருக்கு ஒரு கால்கட்டு போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்பது அவருடைய குடும்பத்தினர் எடுத்திருக்கும் முடிவு.
ஆமாம், சிம்புவுக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதற்காக சொந்தக்கார வகையறாவில் நல்ல பொண்ணை பார்த்து வருகிறார்கள்.
வீட்டில் பார்க்கிற பெண்ணை திருமணம் செய்ய முதலில் முரண்டு பிடித்த சிம்பு இப்போது நெருங்கியவர்கள் சொன்ன அட்வைஸ்படி சம்மதம் சொல்லியிருக்கிறார்.
அதோடு ஒரே ஒரு கண்டிஷனையும் போட்டிருக்கிறார்.
”நான் பார்க்கிற பொண்ணுக்கு என்னை முதல்ல பிடிச்சிருக்கணும், அப்புறம் அவளை எனக்குப் பிடிச்சிருக்கணும்” என்பது தான் அந்த கண்டிஷன்.
நல்லவேளை பீப் சாங் ரசிகையா இருக்கணும்னு சொல்லாம விட்டாரே..?