கர்நாடக மக்களால் கன்னட சினிமாவிலும் பிஸியான சிம்பு!
காவிரி பிரச்சனையில் பலரும் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
நடிகர் சிம்புவும் தன் பங்குக்கு கர்நாடக மக்கள் ஆளுக்கு ஒரு டம்ளர் தண்ணீரை தமிழர்களுக்கு தருவது போல வீடியோவை வெளியிடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்று அங்குள்ள மக்கள் பலர் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் தமிழர்களுக்கு தண்ணீர் தருவது போல வீடியோக்களை வெளியிட்டு மாநிலம் தாண்டிய மனித உறவுகளின் ஒற்றுமையை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர்.
இதனால் சிம்புவுக்கு கன்னட மக்களிடம் வரவேற்பும், மவுசும் அதிகரித்தது. இதனால் அவருக்கு கன்னடப் படம் ஒன்றில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதற்காக சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு சென்ற சிம்பு ‘இருவுதெல்லவா பிட்டு’ என்ற கன்னட படத்துக்காக பாடல் ஒன்றை பாடிவிட்டு வந்திருக்கிறார்.
ஏற்கெனவே சிம்பு சந்தானம் நடித்த ‘சக்கபோடு போடு ராஜா’ படத்திற்கு இசையமைத்திருந்தார். அடுத்து, ஓவியா நடிக்கும் ’90 எம்.எல்.’ படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இதுதவிர ’லவ் ஆன்தம்’ போன்ற இசை ஆல்பங்களிலும் அவர் பாடிய பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹிட் ஆனது.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.