பணமும் போயிருச்சு..! பொண்ணும் போயிருச்சு..!! : விழா மேடையில் உருகிய சிம்பு

Get real time updates directly on you device, subscribe now.

innime-audio-launch

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்திருக்கும் புதிய படம் ‘இனிமே இப்படித்தான்’.

இப்படத்தின் ஆடியோ பங்ஷன் இன்றுகாலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மட்டுமில்லாமல் அவருடைய பேச்சும் கூட சிறப்பாக இருந்தது தான் அங்கிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

காதல், பணம், புகழ், திருமணம், குழந்தை, கஷ்டம் என மனுஷன் தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் மேடையில் வெளிப்படையாக கொட்டித் தீர்த்தார்.

”சந்தானத்தை நீங்க தான் ‘மன்மதன்’ படத்துல அறிமுகப்படுத்துனீங்க. இப்போ ஒரு பெரிய இடத்துல இருக்கார். அதைபத்தி நீங்க என்ன சார் பீல் பண்றீங்கன்னு நெறைய பேர் என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

சந்தானத்தை நான் அறிமுகப்படுத்தினது உண்மைதான். ஆனால் அவருக்குள்ள திறமையை கண்டுபிடிச்சு அவரை அறிமுகப்படுத்தினேன். அதுக்கப்புறம் அந்த திறமையால தான் அவர் இன்னைக்கு இந்த உசரத்துக்கு வந்திருக்கார்.

ஒருத்தரை ‘தட்டி விடுறதுக்கு’ இந்த உலகத்துல நெறைய பேர் இருக்காங்க. ஆனா ‘தட்டி கொடுக்கிறதுக்கு’ சிலபேர் தான் இருக்காங்க. அந்த விதத்துல சந்தானத்தோட திறமைக்கு அங்கீகாரம் கொடுத்து அவரை அறிமுகப்படுத்தினதுல சந்தோஷப்படுறேன்.

Related Posts
1 of 15

என்னோட படங்கள் ரிலீசாகி கிட்டத்தட்ட ரெண்டரை வருஷம் ஆயிடுச்சு. இந்த ரெண்டரை வருஷத்துல நான் நெறைய கத்துக்கிட்டேன். கடவுளைத் தேடி ஆன்மீகத்துக்கு போயிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். கடவுளைத் தேடித்தானே போனேன். பிகரைத் தேடிப் போகலையே..?

என்னை எப்பவுமே ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’னு சொல்வாங்க. அதாவது எந்த விதத்திலேயும் கஷ்டப்படாம வளர்ந்த குழந்தைன்னு… அப்படிப்பட்ட எனக்கு இந்த 2 வருஷம் ஒரு சாதரண மனுஷன் என்னென்ன கஷ்டங்களை அனுபவிப்பான்கிறதை கத்துக்கொடுத்துச்சு. அவ்ளோ கஷ்டப்பட்டேன்.

அப்போ ஒரு ஒரு விஷயத்தை மட்டும் தான் நான் ஆராய்ஞ்சு பார்த்தேன். எல்லாமே என்னை விட்டுப் போயிடுச்சு. எல்லாம்னான் எல்லாமே தான்… நான் எவ்ளோ சம்பாதிச்சாலும் அதை எங்க அம்மாகிட்ட போய் தான் கொடுப்பேன். நான் படங்கள் நடிக்காததுனால சுத்தமா கையில காசு இல்ல. அந்த சமயத்துல எங்க அம்மாகிட்ட போய் காசு கேட்கிறதுக்கு கூட கஷ்டமா இருந்துச்சு.

காசும் போயிடுச்சு… பணமும் போயிடுச்சு… படமும் ரிலீசாகல… சரி ஓகே. நமக்காக ஒரு பொண்ணு இருக்கா. அவ நம்மளை லவ் பண்றா… அவ இருப்பான்னு நெனைச்சேன். பொண்ணும் போயிடுச்சு… கல்யாணம் ஆகி குழந்தை பொறந்ததுன்னா அந்தக் குழந்தையோட முகத்துல ஒரு சிரிப்பு இருக்கும். அந்த சிரிப்பைப் பார்த்தாவது என்னோட கஷ்டம் போயிடும்னு நெனைச்சேன். அந்த சந்தோஷமும் கெடைக்கல.

இப்படி போன ரெண்டு வருஷத்துல எல்லாமே என்னை விட்டு போனப்போ என் கூடவே இருந்தது என்னோட ரசிகர்கள் மட்டும் தான். அவங்க தான் என்னை தூக்கி நிறுத்தியிருக்காங்க. அதேமாதிரி மீடியாக்களும் என்னைப்பத்தி ஏதாவது (அது காண்ட்ரவர்ஸியாக்கூட இருக்கும்) எழுதிக்கிட்டே இருந்து எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க.

நான் நடிச்ச ‘வாலு’ படத்துக்கு கிட்டத்தட்ட 6 மாசமா ரிலீஸ் தேதி போட்டு போட்டு தள்ளிப் போட்டுக்கிட்டே வர்றாங்க. கடைசியா மே 8-ம் தேதி ரிலீசுன்னு போட்டாங்க. அன்னைக்கும் படம் ரிலீசாகல. என்னடா கடவுள் இதுலேயும் நம்மை கை விட்டுட்டாரோன்னு நெனைச்சப்ப தான் எங்க அப்பா ‘வாலு’ படத்தை ரிலீஸ் பண்ண முன் வந்தார்.

ஆக எதோ ஒரு விஷயம் நம்மளை காப்பாத்திக்கிட்டிருக்கு. நாம செய்ற ஒரு சின்ன நன்மை தான் அதுக்கு காரணம். நான் இத்தனை நாளா எனக்காக வாழ்ந்தேன். இனிமே மத்தவங்களுக்காக வாழப்போறேன், அப்படி வாழ்ந்தா என்னைக்குமே நாம நல்லா இருப்போம். போன ரெண்டு வருஷமா இதைத்தான் நான் கத்துக்கிட்டேன்.

சந்தானத்தோட இந்த வளர்ச்சிக்குப் பின்னாடி அவரோட அம்மா, அப்பா, நண்பர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருமே அவருக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க. இந்தப்படத்தை முருகன், ஆனந்த்துன்னு ரெண்டு பேர் இயக்கியிருக்காங்க. ஆனா பேர் மட்டும் முருகானந்த்துன்னு ஒரே பேரே போட்டிருக்காங்க. அந்த ஒற்றுமையே இந்தப்படத்தோட முதல் வெற்றின்னு நெனைக்கிறேன். ஒற்றுமை தான் எல்லா விஷயத்திலேயும் முக்கியம். அந்த விதத்துல இந்த டீமுக்கு ஒற்றுமை இருக்கிறதுனால கண்டிப்பா இந்தப்படம் வெற்றிப்படமா அமையும்.” இவ்வாறு சிம்பு பேசினார்.