காவேரி விவகாரம் : வெளியானது சிம்புவின் டம்மி வாய்ஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

simbu1

காவேரி விவகாரத்தால் தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது.

இதில் அதிக வாய்ஸ் கொடுக்க வேண்டிய ஆளும் கட்சியே அடக்கி வாசித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல எல்லோரும் திரையுலகை நோக்கி கல்லெறிய ஆரம்பித்திருக்கிறார்கள்.

குறிப்பாக முன்னணி நடிகர்கள் ஏன் இன்னும் வாய்ஸ் கொடுக்கவில்லை என்கிற கோபம் எல்லோரிடமும் இருக்கிறது.

இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக காவேரி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை சிம்பு தெரிவித்தார் என்று ஒரு விஷயம் ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டது.

”இனிமேல் என் படங்கள் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது” என்று சிம்பு சொன்னதாக அந்தத் தகவல் பரவியது.

அந்தச் செய்தியை சிம்புவின் துடுக்கான ரசிகர்கள் ஷேர் செய்து ”நீ தாண்டா தமிழன்” என்றெல்லாம் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.

Related Posts
1 of 35

ஆனால் அப்படி ஒரு சிம்மாசனத்துக்கு நான் அறுகதையற்றவன் என்று தனது அறிக்கை மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சிம்பு.

அதனால் தானோ என்னவோ காவிரி விவகாரம் குறித்து நான் எந்த ஸ்டேட்மெண்ட்டும் வெளியிடவில்லை என்று புதிதாக ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தற்போது நான் தாய்லாந்து நாட்டில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நல விரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர்.

இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவிரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.

சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே. அதேபோல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.

இந்த பிரச்சினையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.

என்ன பண்றது சிம்புவோட தெம்பு இம்புட்டுத்தான் போல!