ஒரு டம்ளர் தண்ணீர் போராட்டம்! – சிம்புவை நெகிழ வைத்த கர்நாடக மக்கள்!
காவிரி விவகாரத்தில் ஓட்டு வாங்க மட்டும் தான் இரு மாநில அரசியல்வாதிகளும் மக்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் கர்நாடகாவில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். நம் உறவுகள் தான். அவர்கள் வரும் புதன்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை Unite for humanity என்ற ஹேஸ்டேக் உருவாக்கி, ஒற்றுமையை காட்டும் வகையில், ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து, நாங்கள் தமிழர்களுக்கு தண்ணீர் தருவோம் என வீடியோ எடுத்து காட்டுங்கள் என்று ஆவேசமாக கேட்டுக் கொண்டார்.
அவருடைய இந்தப் பேச்சைக் கேட்ட பலரும் நம்பிக்கையில்லாமல் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் சிம்பு பேசிஹ வீடியோவை இணையத்தில் பார்த்த கர்நாடக மக்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் Unite for humanity என்ற ஹேஸ்டேக் மூலம் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.
இதைப் பார்த்ததும் நெகிழ்ந்து போய் பேசிய சிம்பு ”கங்கை, காவிரி, யமுனா ஆகியோரின் பிள்ளைகளாக நாம் இருக்கிறோம். அந்த தாய்கள் எந்த பிள்ளையிடமும் பாகுபாடு காட்டமாட்டார் என்பதை நான் ஏற்கிறோம். ஆனால் ஒரு சில ஊழல் அரசியல்வாதிகள் மக்களின் மனதை மாற்றுகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இவர்களின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும். நான் கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளேனா. நான் கன்னடர் அல்ல, பக்கா தமிழன். நான் கன்னடர்களை ஆதரிக்கவில்லை, மனிதாபிமானத்தை மட்டும் ஆதரிக்கிறேன்.
கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோவை பார்த்த தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளனர். நான் கன்னடர்களிடம் தண்ணீருக்காக கெஞ்சுகிறேன் என்று சில தமிழர்கள் கூறிவது, இரு மாநில மக்களுக்கும் நடைபெறும் நல்லதை கெடுப்பதற்கான முயற்சியாகும். நல்லது நடந்து விட்டால் அவர்களுக்கு பிரச்சினையாகி விடும். அதனால் என்னை பற்றி அவ்வாறு கூறுகின்றனர். அதனால் மக்களின் மனதை நீர்த்து போக செய்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி பெரும்பாலான மக்கள் உண்மையை புரிந்து கொண்டுள்ளனர். மனிதாபிமானத்துடன் மக்கள் இருக்கும் போது நாம் தவறாக பேசுபவர்கள் குறித்து கண்டு கொள்ளக் கூடாது.
மக்களின் மனநிலையை மாற்றுவது அத்தனை சுலபம் இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து கன்னடர்கள் இது போன்று செய்து தமிழர்களின் மனதில் இடம்பிடித்து விட்டனர். மக்கள் என்ன செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார்களோ அவர்களுடன் கடவுள் துணையாக இருப்பார். அதனால்தான் இந்த மன மாற்றம் சுலபமாக நடந்து விட்டது. இந்த பிரச்சினைகளை எப்போது உடைக்க வேண்டும் என்று கடவுள் முடிவு எடுத்துவிட்டால் அதை செய்துமுடித்துவிடுவார்.
மனிதாபிமானத்தை மதித்த அனைத்து மக்களுக்கு நன்றி. இரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து நமக்கு நல்லதை செய்ய வேண்டும். நல்லது நடக்க வேண்டும் என்றால் இதை வருங்காலத்திலும் வலியுறுத்துவேன். அதற்காக நான் அரசியல்வாதியோ, தலைவரோ , என் பின்னால் வாருங்கள் என்றோ கூறமாட்டேன், மக்களுடன் மக்களாக துணையிருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.