நிறத்தை வைத்து கிண்டல் செய்தார்கள் – கண்ணீர் விட்ட அருண்பாண்டியன் மகள்!

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்கும் படம் ‘தும்பா’.

‘கனா’ புகழ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்குகிறார். குழந்தைகளோடு குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் விதமாக தயாராகியிருக்கும் இப்படம் வரும் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

அதையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேடைக்கு பேச வந்த கீர்த்தி பாண்டி பேச ஆரம்பிக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார்…

Related Posts
1 of 134

”நான் பட வாய்ப்புகள் தேடிய போது சில இயக்குனர்கள் என்னுடைய உடல் தோற்றத்தையும், நிறத்தையும் கிண்டல் செய்தார்கள். நீயெல்லாம் நடிக்க வந்து விட்டாயா? என்று கேலி செய்தார்கள். உனக்கு நடிப்பு செட் ஆகாது என்று என்னை ஒதுக்கினார்கள்.

அதனால் தும்பா படத்தில் என்னை நடிக்கக் கூப்பிட்ட போது நம்பிக்கையில்லாமல் போனேன். ஆனால் டைரக்டர் ஷரிஷ் நான் உங்கள் திறமையை மட்டும் தான் பார்க்கிறேன். உடல் தோற்றமோ? நிறமோ ஒரு பொருட்டே அல்ல என்று என்னை கமிட் செய்து நடிக்க வைத்தார். என் திறமையை நம்பி இந்தப்படத்தில் என்னை நடிக்க வைத்த அவரை நான் என்றைக்குமே மறக்க மாட்டேன்.

ஒரு நடிகையிடம் நிறத்தை பார்த்து படம் எடுக்காதீர்கள். அவரது திறமையைப் பார்த்து படம் எடுங்கள். அந்தப்படம் தான் நல்ல படமாக இருக்கும்” என்றார்.