சிங்கப்பூர் சலூன்- விமர்சனம்

ஆர்.ஜே பாலாஜியின் மற்றொரு பாசிட்டிவ் படம்
படம் துவங்கியதும் சலூன் கடையைத் திறந்து வைத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார் ஆர்.ஜே. அதற்கான காரணங்கள் படத்தின் காட்சிகளாக விரிகிறது. சிறு வயதிலே முடிதிருத்தும் தொழில் மீது ஆர்.ஜே பாலாஜிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தத் தொழில் மூலம் மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என நம்புகிறார். அவரது நம்பிக்கையை காதலி நம்பவில்லை. மனமுடைகிறார். பின் அப்பா தரும் நம்பிக்கையால் எழுகிறார். அதன் பின்னும் விழுகிறார் எழுகிறார். அழுகிறார் எழுகிறார் என வீழ்ச்சியும் வளர்ச்சியுமாக படம் பயணித்து முடிவில் சுபம்
ஹீரோவாக ஆர்.ஜே பாலாஜி பாஸ்மார்க். எமோஷ்னல் காட்சிகளில் தான் அவரது குரல் எடுபடமாட்டேன்கிறது. சத்யராஜ் காமெடியில் துவம்சம் செய்துள்ளார். இடைவேளைக்கு முன்பு படத்தைக் காப்பாற்றியதே சத்யராஜ் தான். ரோபோ சங்கர் வெகுநாட்களுக்குப் பின் நல்ல நல்ல ஒன்லைனர்களால் ரசிக்க வைத்துள்ளார். நாயகிகள் ஓகே ரகம். தலைவாசல் விஜய் நச் ரகம். ஆர்.ஜே பாலாஜியின் நண்பன் கேரக்டரும் தேர்ந்த தேர்வு
பாடல்கள் பெரியளவில் கேலப்-ஆக இல்லை. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.ஒளிப்பதிவில் தரம் இருந்தாலும் சி.ஜி டீம் நிறைய சொதப்பியுள்ளது.
காமெடி கலகலப்பு என முன்பாதி செம்மயாக ஸ்கோர் செய்த சலூன் இரண்டாம் பகுதியில் தட்டுத்தடுமாறி பாவமாகிவிடுகிறது. ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் படம் எங்கங்கோ அலைபாய்வதால் சிங்கப்பூர் சலூன் க்ளீன் சேவ் ஆகுமா எனத் தெரியவில்லை
2.75/5