‘வட சென்னை’யிலிருந்து வெளியேறினார் அமலாபால்! : அவர் இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Get real time updates directly on you device, subscribe now.

vada-chennai

சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட படம் வெற்றிமாறனின் ‘வட சென்னை.’

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியில் ஆரம்பித்து ஜீவா வரை என பல ஹீரோக்கள் இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக இருந்து அடுத்தடுத்து கால்ஷீட் பிரச்சனையால் வெளியேறி விட்டார்கள்.

அதேபோல நாயகிகளிலும் சமந்தா கமிட்டாகி திடீரென்று அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அவரும் வெளியேறினார். உடனே அமலாபாலை அதில் நாயகியாக கமிட் செய்தார் வெற்றிமாறன்.

Related Posts
1 of 46

இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு ஆரம்பமானது. ஆனால் இடையில் தனுஷ் கொடி படத்தில் நடிக்கவும், பவர் பாண்டி படத்தை இயக்கவும் போய் விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே வட சென்னை படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்திருக்கும் வெற்றிமாறன் படத்திலிருந்து நாயகி அமலாபாலை நீக்கியிருக்கிறார்.

அதிக பொருட்செலவில் மூன்று பாகங்களாக வர இருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தில் தற்போது காக்கா முட்டை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட்டாகியிருக்கிறாராம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து வரவில்லை என்றாலும் மாற்றம் நடந்தது உண்மை தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!