‘காப்பான்’ படத்தில் என்ன கேரக்டர்? – சூர்யாவே வெளியிட்ட ரகசியம்
‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. படப்பிடிப்பு ஒரிசாவில் நடந்து வருகிறது.
சூர்யாவுக்கு ஜோடியாக ஆர்யாவின் மனைவி சாயிஷா நடித்து வருகிறார்.
முன்னதாக இப்படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்பு உயர் காவல் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கிறார் என்று சூர்யாவின் கேரக்டர் பற்றி செய்தி வெளியானது.
இதுபோன்ற தகவல்களை பெரும்பாலும் நடிகர்கள் மறுப்பார்கள். ஆனால் சூர்யாவோ ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவரைப் பாதுகாக்கும் எஸ்பிஜி (Special Production Group) அதிகாரியாக நானும் நடிக்கிறேன்’ என்று கேரக்டர் பற்றி கசிந்த ரகசியத்தை உறுதி செய்திருக்கிறார்.