சிம்புவின் ‘மாநாடு’ படம் ட்ராப்பா? – கடுப்பான தயாரிப்பாளர்
‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம் ‘மாநாடு’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தப் படத்தின் தொடக்கவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடக்கவிழா நடைபெறவில்லை. படப்பிடிப்பும் தொடங்கப்படவில்லை.
இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப் போகும் இந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாககடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
அதைப்பார்த்து கடுப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ”மாநாடு படம் கைவிடப்பட்டது என்று ஒரு சிலர் பொய்ச்செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பொய்ச்செய்தியை பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு படத்தைத் தொடங்குவது என்பது சாதாரண விஷயமில்லை. ‘மாநாடு’ குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கதை விவாதம் மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு குறித்த கூடுதல் தகவல் விரைவில் அறிவிக்கப்படும்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.