சம்பள விசயத்தில் பெரிய நடிகர்கள் தொடர்ந்து மவுனம்
கொரோனாவால் எல்லாத்துறைகள் போலவே சினிமாத்துறையும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப்பாதிப்பில் தயாரிப்பாளர்களுக்கு துணை நிற்கும் அளவில் சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துள்ளனர். விஜய் ஆண்டனி, ஹரிஸ் கல்யாண் ஆகியோர் குறைத்துள்ளதைப் போல இயக்குநர்களில் ஹரியும் தனது சம்பளத்தைக் குறைத்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து பெரிய நடிகர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்கள். அதற்கான காரணத்தை அவர்களே சொல்லும் வரை இங்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வரும். பட் இப்ப காரணம் முக்கியமல்ல பாஸ்..காரியம் தான் முக்கியம். நல்ல முடிவா எடுங்க