தமிழ்க்குடிமகன்- விமர்சனம்
ஒரு முக்கியமான டிஸ்கசனை கையில் எடுத்துள்ள இந்தத் தமிழ்க்குடிமகன் சாதித்தானா? சறுக்கினானா?
மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மனைவி மகன், அம்மா, தங்கை என வாழும் சேரன் ஒரு சலவைத் தொழிலாளி. மேலும் ஈமச்சடங்கு செய்யும் பணியும் அவரே செய்கிறார். அந்த ஊரின் சாதி வெறியர்களான அருள்தாஸ், லால் இருவர் மூலமாக சேரன் குடும்பத்திற்குள் புயல் வீசுகிறது. அந்த நேரத்தில் லால் வீட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. அதுக்கு காரியம் செய்ய சேரனை அழைக்கிறார்கள்..சேரன் தன் சுயம் கருதி வர மறுக்கிறார். அதன்பின் என்னென்ன சம்பவங்கள் நடக்கின்றன என்பத படத்தின் கதை
சேரன் முழுமை இல்லாத ஓவர் நடிப்பை இப்படத்திலும் பதிவு செய்கிறார். நாயகி பிரியங்கா செட் ப்ராபர்டி அளவுக்குத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளார். லால் மட்டும் தனது கம்பீரம் குறையாத நடிப்பால் பட்டயக்கிளப்பியுள்ளார். அருள்தாஸும் லாலுக்கு சற்றும் சளைக்காமல் நடித்துள்ளார். வேல.ராமமூர்த்தி, தீப்ஸிகா உள்ளிட்ட பிற நடிகர்களும் ஓகே ரகம். எஸ்.பி.ஆக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கவனம் ஈர்க்கிறார்.
சாம்.சி எஸ் தனது இசையால் காட்சிகளுக்கு உயிர்கொடுக்க முயற்சித்துள்ளார். பாடல்களும் ஈர்க்கவே செய்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளை அதன் புழுதி நிறம் மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர்
ஒரு நல்ல களமும் கதையும் கிடைத்தும் திரைக்கதையில் விளையாட தவறிவிட்டார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இவரே படத்தின் தயாரிப்பாளரும் கூட. சர்டிபிகேட்டில் சாதியை ஒழித்தால் எல்லாம் மாறிவிடும் என்ற கருத்தும் அரசியலும் மிகவும் பாமரத்தனமாக இருக்கிறது. தமிழ்க்குடிமகனிடம் வெறும் ஆர்வம் மட்டுமே மிஞ்சுவதால் ரசிக்க முடியவில்லை. இருப்பினும் ஒரு நல்ல முயற்சியை கையில் எடுத்தமைக்காக பாராட்டலாம்
2.5/5