சத்தமில்லாமல் ஹீரோ ஆனார் காளி வெங்கட்!
காமெடியன்களுக்கு ஹீரோவாகும் ஆசை குறைந்தபாடில்லையா? அல்லது கோடம்பாக்கத்தில் ஹீரோவுக்கு வறட்சியா என்று தெரியவில்லை.
விவேக், வடிவேலு, சந்தானத்தைத் தொடர்ந்து காமெடியன் காளி வெங்கட்டும் சத்தமில்லாமல் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘மாடு’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பற்றி பேசும் படமா என்று கேட்டால் ”இல்லை இது பக்காவான பொலிடிக்கல் ட்ராமா” என்கிறார்கள்.
தான் சார்ந்த அரசியல் கட்சிக்கு மாடு மாதிரி உழைக்கும் ஒரு அடிமட்ட தொண்டனைப் பற்றிய படமாம். அரசியல் சார்ந்த படமென்பதால் பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.