2 நாட்களில் 11 கோடி! : வெற்றியை உறுதி செய்த ‘தொடரி’

தொடர்ந்து நல்ல கதையம்சமுள்ள வெற்றிப்படங்களை கொடுத்து வரும் பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ”தொடரி.”
இயற்கையின் ஒட்டுமொத்த அழகையும் மெல்லிய காதலோடு தன்னுடைய படங்களில் தந்து கொண்டிருக்கும் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க நேற்று முன்தினம் செப்டம்பர் 22-ம் தேதி தமிழ்நாட்டில் 400 தியேட்டர்களுடன் உலகம் முழுவதும் சுமார் 2000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியானது.
ஒரு ரயில் பயணத்தில் நாம் பார்க்கிற காதல், செண்டிமெண்ட், ஃபேமிலி என அத்தனை விஷயங்களையும் முழுமையாக கொண்டு வந்திருக்கும் தொடரி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
தனுஷின் காமெடி கலந்த யதார்த்தமான நடிப்பிலும், கீர்த்தி சுரேஷின் குறும்புத்தனமான நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் ‘தொடரி’ ரிலீசான இரண்டே நாட்களில் சுமார் 11 கோடி ரூபாயை வசூலித்து தனது வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
தனுஷின் முந்தைய படங்களை விட ரிலீசாகி இரண்டே நாட்களில் அதிக வசூலை அள்ளிய திரைப்படம் ‘தொடரி’ தான் என்கிற பெருமையோடு தியேட்டர்களில் வசூல் எக்ஸ்பிரஸ் ஆக மாறியிருக்கிறது ‘தொடரி’.
படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்ததைக் கேள்விப்பட்ட இயக்குநர் பிரபு சாலமனும், நாயகன் தனுஷும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
டைட்டிலுக்கு ஏற்றாற்போலவே வசூலும் வேகம் எடுக்க ஆரம்பித்திருப்பதால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.