ரசிகரை குருவாக்கிக் கொண்ட விஜய்! : படப்பிடிப்பில் ஆச்சரியம்

Get real time updates directly on you device, subscribe now.

vijay2

திறமை எங்கிருந்தாலும் யாரிடமிருந்தாலும் மதிக்கப்பட வேண்டும்.

ஆனால் எல்லா இடங்களிலும் திறமைசாலிகள் மதிக்கப்படுவதில்லை. அதிலும் சினிமாவில் இதெல்லாம் நடப்பதே அபூர்வம் தான்.

பசையுள்ள பார்ட்டி யாராவது சினிமாவுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு உதவி செய்ய கூப்பிடாமலேயே பலரும் ஓடோடி வருவார்கள். அதே சமயத்தில் திறமையை மட்டுமே வைத்துக் கொண்டு சினிமாவில் போராடுபவர்களுக்கு இங்கு வாய்ப்பு அமைவது என்பது புலி புல்லுக்கட்டை மேய்ந்த கதை தான்.

Related Posts
1 of 78

இருந்தாலும் ஒரு சில திறமையாளருக்கு அந்த வாய்ப்பு தானாக அமைந்து விடும். அப்படித்தான் தனது ரசிகர் ஒருவரை படப்பிடிப்பு முழுமைக்கும் தன் கூடவே வைத்திருக்கிறாராம் இளைய தளபதி விஜய்.

தமிழ்ப்படங்களில் நெல்லைத் தமிழ், கொங்கு தமிழ், சென்னைத் தமிழ் என எல்லாவிதமான தமிழையும் சரியாகப் பேசி நடித்த ஹீரோக்கள் லிஸ்ட்டை எடுத்தால் கமல் உட்பட ஒரு சில ஹீரோக்கள் தான் நம் ஞாபகத்து வந்து போவார்கள்.

சிலருக்கு அப்படிப்பட்ட கதைகள் அமையும். சிலருக்கு அமையாது. விஜய்க்கு அவர் நடித்து வரும் 60 வது படத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடிக்கக்கூடிய கேரக்டர் அமைந்திருக்கிறது.

இதனால் நெல்லைத் தமிழை அச்சுப் பிசகாமல் படத்தில் பேச நினைத்த விஜய், பயிற்சி கொடுப்பதற்காக அந்த மொழியை இயல்பாக பேசும் தனது ரசிகர் ஒருவரையே தேடிப்பிடித்து தனக்கு குருவாக நியமித்து அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து பயிற்சி எடுத்து படத்தில் நடித்து வருகிறாராம்.