எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும் தண்டுபாளையம் படவிழாவில் சுமன் ரங்கநாத்
வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஹீரோயின் சுமன் ரங்கநாத்
“என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா இங்குள்ள படங்கள் எல்லாம் பார்ப்பாங்க. இந்தப்படத்தில் நடிக்க கேட்டதும் உடனே சம்பதித்தேன். ஏன்னா இந்தக்கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது. எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு ஒரு விஷன் இருக்கு. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு நன்றி.
எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும். என் கேரக்டர்களை நான் காதலிப்பேன். இந்தப்படம் எனக்கு மிகச்சிறப்பான அனுபவம். ரொம்ப கஷ்டமான லொக்கேஷனில் படம் எடுத்தோம்..முள் வெயில் எல்லாம் சோதித்தாலும் எங்கள் வேலைகளை சரியாகச் செய்துள்ளோம். இந்தப்படத்தில் இசை ரொம்ப நல்லாருக்கு. இயக்குநர் நாயக் சாருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் தமிழில் வெளிவருவது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்