பிரபுதேவா படத்தில் பாடகர்களாக அறிமுகமாகும் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி!

Get real time updates directly on you device, subscribe now.

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தைத் தொடர்ந்து ம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா தயாரித்து வரும் படம் ‘சார்லி சாப்ளின் 2’.

இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கேட்டபோது இது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம் என்றார்.

Related Posts
1 of 14
செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி

மேலும் ”இந்தப் படத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி இந்தப் படத்தில் பின்னணிப் பாடகர்களாக அறிமுகமாகிறார்கள்.

அவர்கள் இருவரும் முதன் முறையாக இணைந்து இந்தப் படத்துக்காகப் பாடிய “சின்ன மச்சான் செவத்த மச்சான் சின்ன புள்ள செவத்த புள்ள ” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது.

இந்தப்பாடல் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம், நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம்.

இந்த பாடல் காட்சிக்காக பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப்பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. சூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஷக்தி சிதம்பரம்.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.