தங்கமகன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Thanga-Magan-Review-Photo1

RATING : 3.1/5

றதி நோயால் அவதிப்படும் தந்தை அலுவலகத்தில் மேலதிகாரிக்கு உதவி செய்யப் போய் ‘திருடன்’ என்கிற அவப்பெயரோடு தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்த நொடிஅவரை சார்ந்திருந்த குடும்பமே சிதைந்து போக, ஒரு மகனாக தந்தையின் இறப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் நியாயத்தை ஊரறியச் செய்ய முற்சிக்கிறார் தனுஷ்.

அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே இந்த ‘தங்கமகன்’.

‘வேலையில்லா பட்டதாரி’ என்கிற தெறி ஹிட் கூட்டணியின் (தனுஷ் – வேல்ராஜ்) காம்போ என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே ஜாஸ்தி.

மிடில் கிளாஸ் ஃபேமிலி இளைஞனாக வரும் தனுஷ்  அந்த வகுப்புக்கே உரிய செண்டிமெண்ட்டோடு காமெடி வித் லவ் என ஹிட்டுக்கான கமர்ஷியல் கியரை மாற்றிப் போட ஆரம்பித்திருக்கிறார்!

மீசை, தாடியை வழித்துக் கொண்டு தலை முடியையும் திருத்திக் கொண்டு சதீஷுடன் அவர் சேர்ந்து செய்யும் வயசுக்கே உரிய கலாட்டாக்கள் ஒரு ரகம் என்றால், அப்பாவின் திடீர் இறப்பில் குடும்பம் தத்தளிக்கும் போது அதை தாங்கிப் பிடிப்பதற்காக வேலை தேடி அலைவதும், அந்த கையாளாகத்தனத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அடுத்தடுத்து அடிக்கிறார் சிக்ஸர்!

இதுபோன்ற கேரக்டர்களுக்கெல்லாம் தனுஷுக்கு ரிகர்சல் தேவையில்லை. நல்ல மகனாக, நல்ல நண்பனாக நல்ல காதலனாக, நல்ல கணவனாக, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக என பல கட்டங்களை அசால்ட்டாக தாண்டிப் போகிறார்.

”நாம இப்படியாம்மா இருந்தோம், இந்த வாழ்க்கை போதுமா? என்னால இதையெல்லாம் பார்த்துக்கிட்டு சந்தோஷமா இருக்க முடியலம்மா? அதனால தான் குடிச்சுட்டு வந்தேன். என்னை மன்னிச்சிரும்மா.. நீயும் என்னை மன்னிச்சுரும்மா” என்று அம்மா, மனைவி கால்களில் விழும் காட்சி ஒரு மிடில் கிளாசில் வலியின் அப்பட்டமான வெளிப்பாடு!

Related Posts
1 of 10

காமெடிக்கு தனுஷ் கூடவே வரும் சதீஸ் இருந்தாலும் இவர்கள் காம்பினேஷனில் முந்தைய படங்களில் இருந்த ‘கிச்சு கிச்சு’ டோன் இதில் கொஞ்சம் குறைவு தான்.

திருமணத்துக்கு முந்தைய காதலியாக வரும் எமி ஜாக்சனை டயலாக்கை டெலிவரி செய்ய வைப்பதற்குள் பெரும்பாடு பட்டிருப்பார் போல இயக்குநர். அதிலும் தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடிக்கொண்டே போவார் பாருங்கள். தியேட்டரே சிரிக்கிறது. டயலாக் டெலிவரி செய்ய உதடுகள் சங்கடப்பட்டாலும் தனுஷுடன் லிப் லாக் அடிக்க எந்த கஷ்டமும் படவில்லை.

குடும்ப குத்து விளக்காக வருகிறார் சமந்தா. பொறந்த வீடு, புகுந்து வீடு இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணாக மிளிர்கிறார். அதற்காக கர்ப்பிணியாக இருக்கும் போது கூட மேக்கப் கலையாமல் காட்டியிருப்பது டூ மச்!

அதிகம் பரிதாபப்பட வைத்து கைதட்டல் வாங்குவது தனுஷ் அப்பாவாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் தான். மறதி நோய் வந்த குடும்பத் தலைவனின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை வருகிற சீன்களில் எல்லாம் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அடிக்கடி அவர் மறதிக்கு காட்சிகளை காட்டும் போதே அதனால் ஏதோ ஒரு பிரச்சனை வரப்போகிறது என்கிற கதையின் போக்கை ஈசியாக ரசிகர்களால் யூகித்து விட முடிவது திரைக்கதையின் பலவீனம்.

அதிகம் பேசாமல் அடக்கி வாசிக்கும் அம்மாவாக வருகிறார் ராதிகா. கிளைமாக்ஸ் வில்லனாக ஜெயப்பிரகாஷ் இருக்கும் போது, சொந்தக்கார பையனாக வரும் ஆதித் அருணையும் சில காட்சிகளில் வில்லனாக காட்டியிருப்பது தனுஷுன் வயசுக்காக இருக்குமோ? என்கிற சந்தேகம் வருகிறது.

அறிமுக ஒளிப்பதிவாளர் குமரனின் கேமரா கோணங்கள் எல்லாமே கலர்ஃபுல்! அனிருத்தின் இசையில் பின்னணியில் வி.ஐ.பியைப் போலவே பீலிங்க்ஸை கொட்டுகிறார், ”என்ன சொல்ல….” பாடல் ஜில்லிட வைக்கிறார்.

ஏதோ செக்யூரிட்டி வேலையை வாங்கிக் கொடுப்பது போல அப்பா வேலை பார்க்கும் வருமான வரி அலுவலகத்திலேயே மகன் தனுஷூக்கும் அவ்வளவு ஈசியாக வேலை கிடைத்து விடுகிறது அது எப்படி? இயக்குநருக்கே வெளிச்சம்.

கமர்ஷியல் என்கிற வட்டத்துக்குள் போகாமல் மிடில் கிளாஸ் ஃபேமிலிக்குள் நடக்கும் பிரச்சனைகளை காட்சிப்படுத்தி குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் சென்டிமெண்ட் வீரியத்தோடு இயக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் வேல்ராஜ்.

தங்க மகன் – வெற்றிக்குத் தகுதி உள்ளவன்