‘அழகான தொடைகள்’ அனுஷ்காவே ஃபீல் பண்ணல… நீங்க ஏம்ப்பா கொந்தளிக்கிறீங்க…?
அழகான நடிகைகளை எல்லை மீறி வர்ணிப்பதில் காமெடியன்கள் கொஞ்சம் அதி புத்திசாலிகளாக நடந்து கொள்ள முயற்சிப்பார்கள். அதுவே சில நேரங்களில் அவர்களை சர்ச்சையில் சிக்க வைத்து விடும்.
அனுஷ்கா நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் தெலுங்கு ஆடியோ பங்ஷனை காமெடி நடிகர் அலி மற்றும் பெண் தொகுப்பாளர் தொகுத்து வழங்கினார்கள்.
அப்போது அலி ‘நடிகை சோனலினுக்கு தொடையே கிடையாது. அவரை கேட்டதற்கு பதிலாக அனுஷ்காவிடம் கேட்டிருக்கலாம். அவருக்கு அழகான தொடைகள் இருக்கிறது. ‘வேட்டைக்காரன்’ படத்தில் அவரது தொடையை பார்த்தபிறகு நான் அவரின் ரசிகன் ஆகி விட்டேன்’ என்றார்.
அனுஷ்காவைப் பற்றி பகிரங்கமாக அலி அடித்த கமென்ட் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்ததோடு பல தெலுங்கு முன்னணி ஹீரோக்களும் அலியை திட்டித்தீர்த்தனர். அதற்கடுத்த நாட்களில் அலி நான் எந்த கெட்ட எண்ணத்தோடும் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை, காமெடியாகத்தான் சொன்னேன் என்று மன்னிப்பும் கேட்டு விட்டார்.
அப்போது அலியின் கருத்து பற்றி வாய் திறக்காமல் இருந்த அனுஷ்கா இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார்…
”அலி என்னுடைய நல்ல நண்பர், அவரைப்பற்றியும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும் நான் நன்கு தெரிந்து வைத்திருக்கிறேன். என்னைப்பற்றி அவர் அடித்த கமெண்ட் மனதைக் காயப்படுத்தவில்லை. அவர் அந்த அர்த்தத்தில் பேசியதாகவும் நினைக்கவில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.
அனுஷ்காவே ஃபீல் பண்ணல… நீங்க ஏம்ப்பா கொந்தளிக்கிறீங்க…?