வைரமுத்து விவகாரம் – சின்மயியை ஓரங்கட்டும் ஏ.ஆர் ரஹ்மான்!
ட்விட்டரில் பிரபலமாகி வரும் ‘மீ டூ’ ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சுமார் 15 வருடங்கள் கழித்து கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரைச் சொல்லி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் பாடகி சின்மயி.
அவருடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், எதிர்ப்பு தான் அதிகமாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக கார்த்திக் உள்ளிட்ட பின்னணிப் பாடகர்கள் பெயர்களையும் இந்த விவகாரத்தில் சேர்த்து சொல்லும் சின்மயி ஊடகங்களில் பேசும்போது வைரமுத்து பெயரை மட்டுமே பிரதானப்படுத்திப் பேசுவது அவரைப் பின்னால் இருந்து யாராவது இயக்குகிறார்களோ? என்று பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
இதற்கிடையே வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைத்ததை கேள்விப்பட்டதிலிருந்து பெரும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.
”சின்மயி என்ன அவர் இஷ்டத்துக்கு எல்லோர் மீதும் குற்றம் சாட்டுகிறார்” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் சொல்லி வருத்தப்படும் அவர் இனி தான் இசையமைக்கும் படங்களில் சின்மயிக்கு பாட வாய்ப்புகள் கொடுப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
பொதுவாகவே எந்த சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ள விரும்பாதவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதேபோல சர்ச்சையை கிளப்புபவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டார். அதன்படியே ஒட்டுமொத்த இசைத்துறையை மட்டுமில்லாமல் திரைத்துறை மீதே களங்கம் கற்பிக்கும் விதமாக குற்றச்சாட்டுகளை கூறிவரும் சின்மயியை தள்ளி வைப்பது என்கிற முடிவுக்கு வந்தாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.