திபெட் படத்தின் பிரம்மாண்ட ஆடியோவிழா!

Get real time updates directly on you device, subscribe now.

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.

Related Posts
1 of 4

ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

“தி பெட்” படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் தங்கம், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் ரஷீக் ஆகியோர் கலந்துகொண்டனர். .