‘குற்றம் 23’ : அடிச்சு நொறுக்கப் போகும் அருண் விஜய்!
ஹீரோவாக நடித்த எந்தப் படத்திலும் கிடைக்காத பேரும், புகழும் ‘என்னை அறிந்தால்’ என்ற ஒரே படத்தில் கிடைத்தது அருண் விஜய்க்கு!
படத்தில் அஜித்துக்கு வில்லன் என்றாலும் அவரின் மிரட்டலான நடிப்பைப் பார்த்து அஜித் ரசிகர்களே சிறப்பான வரவேற்பைக் கொடுத்தார்கள்.
அதன்பிறகு புதிதாக கமிட் செய்கிற படங்கள் மட்டுமல்ல… சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் தயாரிக்கப் போகிற படங்களுக்கான கதைத் தேர்விலும் கவனமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறார் அருண்விஜய்.
தமிழில் மிரட்டினாலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளில் அருண் விஜய்க்கு கடும் கிராக்கி.
சொந்தப் படமான வா டீல் படத்தை ரிலீஸ் செய்தால் இன்னொரு ரவுண்டு வரலாம் அருண் விஜய். அதற்கான ரிலீஸ் வேலைகளை முடுக்கி விட்டிருக்கும் அவர் இன்னொரு பக்கம் தனது சொந்தப்பட நிறுவனமான இன் சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் அவரே தயாரித்து நடிக்கப் போகும் படத்துக்கு குற்றம் 23 என்று வித்தியாசமான டைட்டில் வைத்திருக்கிறார்.
‘ஈரம்’ படப்புகழ் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் இப்படம் மருத்துவ உலகில் நிகழும் சீர்கேடுகளை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டப்போகிறதாம்.
கடந்த மாதம் துவங்கப்பட்ட ‘குற்றம் 23’ படம் அருண்விஜய்க்கு 23 வது படமாம்!
அடிச்சு நொறுக்குங்க அருண் விஜய்!