மோகன்லால்-ஷனாயா கபூர் நடிக்கும் ‘விருஷபா’!

Get real time updates directly on you device, subscribe now.

ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமாகும். இயக்குநர் நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்ட போது… இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.‌ காதல் மற்றும் பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு தீவிர நேர் எதிர் முனைகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகும். அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இப்படத்தின் முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.

‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்’- திரைப்படம் கதை சொல்லல் மற்றும் சினிமாவின் சிறப்பம்சத்தை.. அதன் தரத்தை மறு வரையறை செய்யும் படைப்பாக அமைந்துள்ளது. பட குழுவினர் தரமான உருவாக்கத்தில் சமரசமில்லாமல் முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்கள்.‌

நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகும் ஒரு காவிய ஆக்சன் நிரம்பிய பொழுதுபோக்கு படைப்பிற்காக காத்திருங்கள். இது உங்களை பிரமிக்க வைக்கும். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ ஒன்றாக இருக்கும். மேலும் இந்த திரைப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.‌நவராத்திரி திருவிழாவின் போது ஒரு நல்ல நாளன்று இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.. ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள்.